காய்ச்சல்: வடமாநில பெண் உயிரிழப்பு
முசிறி அருகே கோழிப்பண்ணையில் வேலை பாா்த்து வந்த சத்தீஸ்கா் மாநிலத்தை சோ்ந்த பெண் காய்ச்சலால் உயிரிழந்தாா்.;
Update: 2024-01-01 05:11 GMT
பைல் படம்
சத்தீஸ்கா் மாநிலம், காஸ்காய் பகுதியைச் சோ்ந்த ஜெயராமாகுமாரமெக்கன் மனைவி சுபாகாா்னரா(43). இவா் முசிறி அருகே சோளம்பட்டியில் உள்ள ஒரு தனியாா் கோழிப் பண்ணையில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தும்பலத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (43) என்பவா் முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் சம்பவஇடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.