குறைவான பேருந்துகள் இயக்கம் - பழனியில் பக்தர்கள் அவதி
போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் பழனி பேருந்து நிலையத்தில் குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.;
Update: 2024-01-09 14:10 GMT
பயணிகள் காத்திருப்பு
தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல இடங்களில் பற்றாக்குறையான பஸ்கள் ஓடுகின்றன. இருக்கும் பஸ்ஸில் மக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் பழனிக்கு சாமி தரிசனம் செய்து வரும் பக்தர்கள் பஸ்ஸை பார்த்தவுடன் ஓடி சென்று ஏறுகின்றனர். இதனால் சில நேரங்களில் கீழே விழுந்து கை கால்கள் முறிவும் ஏற்படுகிறது.பழனியில் இருந்து திண்டுக்கல் மார்க்கம் மற்றும் திருச்சி மார்க்கத்தில் இயக்கப்படும் கும்பகோணம் கோட்ட பேருந்துகள் பெரும்பாலும் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.