திமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்
விருதுநகர் மாவட்டம்,திருத்தங்கல்லில் திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்ற திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகர் திருத்தங்கல்லில் மாநகர திமுக சார்பாக "இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல்" என்ற திண்ணை பிரசாரம் நடைபெற்றது.சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 1-வது பகுதியில் மாநகர செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன் திண்ணை பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.இதில் 1-வது பகுதி கழக செயலாளரும் திமுக கவுன்சிலருமான அ.செல்வம், மற்றும் கவுன்சிலர்கள்,மாவட்ட பிரதிநிதி ராஜேஷ்,சென்றாயன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டர்.
தி.மு.க அரசின் 3 ஆண்டு கால சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடுவீடாக விநியோகம் செய்தனர். அப்போது தி.மு.க. அரசின் மூன்று ஆண்டு கால சாதனைகள்,பட்ஜெட்டில் பெண்கள் முன்னேற்றத்துக்காக அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள்,மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்தும்,பேரிடர் கால நிதியை தராமல் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து வருவதையும் மாநகர செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.