சர்தார் 2 படப்பிடிப்பின் போது விபத்து; சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு!!

சர்தார் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சண்டை பயிற்சியாளர் ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2024-07-17 07:08 GMT
சர்தார் 2 படப்பிடிப்பின் போது விபத்து; சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு!!

stunt artist yelumalai died

  • whatsapp icon

கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, இயக்குநர் பிஎஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சர்தார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்தது. கார்த்தி இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார். கார்த்தியுடன் ராஷி கன்னா, லைலா, முனிஷ்காந்த், மற்றும் பலர் நடித்து இருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சர்தார் 2 திரைப்படம் பூஜையுடன் கடந்த வாரம் துவங்கியது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் சர்தார் 2 படத்தின் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எந்த வித உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை, 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். மேலிருந்து கீழே விழுந்ததில், மார்பு பகுதியில் காயமடைந்து நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் ஏழுமலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News