வேட்பு மனு தாக்கல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு

திருச்சியில் முக்கிய வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.;

Update: 2024-03-25 14:32 GMT

தீவிர சோதனை செய்த போலீசார்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் என்பது கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. அது போல் 27ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும். 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது.

அது போல் மார்ச் 30-ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற இறுதி நாளாகும். வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ, அதிமுக வேட்பாளர் கருப்பையா, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில் நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் உள்ளிட்டோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News