லே-அவுட் அங்கீகாரம் பெற பிப்ரவரி வரை இறுதி கெடு - அமைச்சர்

தமிழ்நாட்டில் அனுமதி பெறாத லே-அவுட் அங்கீகாரம் பெறுவதற்கு பிப்ரவரி மாதம் வரை இறுதி கெடு அமைச்சர் சு.முத்துசாமி;

Update: 2023-12-27 12:34 GMT

தமிழ்நாட்டில் அனுமதி பெறாத லே-அவுட் அங்கீகாரம் பெறுவதற்கு பிப்ரவரி மாதம் வரை இறுதி கெடு அமைச்சர் சு.முத்துசாமி

ஈரோட்டில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, கட்டி முடிக்கப்பட்ட கட்டடம் பிளானிங் பர்மிஷன் படி இல்லை என்றால் இதில் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் இதில் உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவு வழங்கி உள்ளதால் , அதன்படி தான் நடக்க வேண்டும் என்றும் இதில் சமாதான திட்டம் எதுவும் கொண்டு வர முடியாது என்றார். லே-அவுட் அப்ரூவல் பெற பிப்ரவரி மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் , இதுதான் கடைசி வாய்ப்பு என்றும் இதற்கு மேல் அனுமதி பெற முடியாது என்றார். நீதிமன்றத்தில் தெளிவான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் மொத்தமுள்ள 1045 குளங்களில், இன்னும் 37 குளங்களில் தண்ணீர் நிரப்பி சோதனை நடத்த வேண்டி உள்ளது தண்ணீர் நிரப்பி அனைத்து குளங்களும் சரிபார்க்கும் பணி உள்ளது.ஜனவரி முதல் வாரத்தில் சரிபார்க்கப்படும்.அனைத்து வேலை முடிந்த பிறகு திறக்கப்படும்.
Tags:    

Similar News