இறுதிக்கட்ட தேர்தல் பயிற்சி - தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு.

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்குவதை மத்திய சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் குமார் பார்வையிட்டார்.;

Update: 2024-04-19 02:59 GMT

ஆய்வு 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நுங்கம்பாக்கம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்குவதை மத்திய சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் குமார் நேற்று  பார்வையிட்டார்.

மத்திய பாராளுமன்ற தொகுதியில் சுமார் 1333 வாக்குச்சாவடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய சென்னை பகுதியில் சுமார் 6900 தேர்தல் பணியாளர்கள் நாளை பணியில் ஈடுபட உள்ளனர் அவர்களுக்கான இறுதி கட்ட பயிற்சி இன்று வழங்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வதற்கான அலுவலர் நியமிக்கப்பட்டு gps பொருந்திய வாகனத்தில் காவல்துறை பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும் அவற்றை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

Advertisement

மத்திய சென்னையை  பொறுத்தவரை 289 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது 50 சதவீதம் பதட்டமான வாக்குச்சாவடிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் மற்றும் கூடுதல் காவல் துறையினரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 65% வாக்குச்சாவடிகளில் நேரலை தகவல்கள் பெறும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News