திமுக ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் நிதி உதவி

டி அம்மாபேட்டையில் திமுக ஆதிராவிடர் குழு சார்பில் பட்டாசு ஆலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி முன்னாள் அமைச்சர் தலைமையில் வழங்கப்பட்டது;

Update: 2024-06-21 07:06 GMT

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக ஆதி திராவிடர் நலக் குழு சார்பில் இன்று 20.06.2024 அரூர் கிழக்கு ஒன்றியம் T.அம்மா பேட்டையை சார்ந்த 8 நபர்கள் கடந்த ஆண்டு ஓசூர் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தார்கள். அவர்களின் குடும்பத்தார்க்கு நிதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.அரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.சந்திர மோகன் தலைமை வகித்தார். தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினர்க்கு 15,000 ரூபாய் வீதம் 1,20,000 ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

Advertisement

தருமபுரி நடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி  முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் C.K.சாக்கன்சர்மா, மாவட்ட ஆதி திராவிடர் நலக் குழு அமைப்பாளர் K. திருமால், அரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் R.வேடம்மாள், மாவட்ட துணை செயலாளர் சி.கிருஷ்ண குமார்,மாவட்ட அமைப்பாளர்கள் ஐடி.விங்கு தமிழழகன், சி.தேசிங்குராஜன், சி.தென்னரசு,மற்றும் திமுக மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்

Tags:    

Similar News