நிதி நிறுவனங்கள் ஆள் வைத்து பைக் பறிமுதல் செய்வது திருட்டாகும்
பைக்குகளையும் 4 சக்கர வாகனங்களையும் நிதி நிறுவனங்கள் ஆள்வைத்து திருடுவது சட்டபபடி குற்றமாகும்;
By : King 24X7 News (B)
Update: 2023-11-09 11:40 GMT
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் குபேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்துமகளிர்காவல்நிலைய ஆய்வாளர் வழக்கறிஞர்களை காவல்நிலையத்தில் அனுமதிக்க மறுப்பதை கண்டித்தும். நிதி நிறுவனம் என்ற பெயரில் வாகனங்களை பறிமுதல் செய்வது திருட்டுக் குற்றம் என்றும் அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.