உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: கலெக்டர் ஆய்வு. 

திருக்குவளை தாலுக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் இன்று தொடங்கியது.

Update: 2024-01-31 11:21 GMT

உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்  தொடக்கம் திருக்குவளை தாலுக்காவில்  கலெக்டர் ஆய்வு.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் இன்று தொடங்கியது. இந்த திட்டத்தின் படி நாகை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ்,  திருக்குவளை வட்டத்தில் ஒரு நாள் முழுவதும் ஆய்வு மேற்கொண்டார்  நீர்முளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ஆட்சியர் மருத்துவமனையில் தொற்று நோய்களின் தாய்மார்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த கோப்புகளையும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா மற்றும் தடுப்பூசி மற்றும்  மாத்திரைகளின் இருப்பு அளவு  ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதனைத் தொடர்ந்து திருக்குவளையில் உள்ள கீழையூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆய்வு செய்து   அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடுபொருள்களின் அளவு மற்றும் அதன் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து விவசாயிகளிடம் கோரிக்கைகள் மற்றும்  குறைகளை கேட்டறிந்தார் கலெக்டர் பின்னர் திருக்குவளை கால்நடை மருத்துவமனைக்கு சென்று அங்கு மருந்து இருக்கு விவரம் மற்றும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்அது தொடர்ந்து திருக்குவளை சமத்துவபுரம் அருகே உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு சென்ற நாகை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அங்கு குழந்தைகளின் உடல் எடை மற்றும் உயரம் குறித்தும் கேட்டறிந்து அவர்களுக்கு வழங்கும் உணவை சாப்பிட்டு குழந்தைகளின் பெற்றோரிடம்தினந்தோறும் வழங்கும் உணவு குறித்தும், கற்பித்தல் குறித்தும் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து திருக்குவளையில் உள்ள அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று51 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதலைமை ஆசிரியர் ஓர் இடத்தில் இருந்து அனைத்து வகுப்புகளையும் கண்காணிக்கும் வகையில் கட்டப்பட்ட கட்டிடத்தின் வடிவமைப்பை பார்வையிட்டார் அதை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு சென்று மாணவர்களுடன் இருக்கை அமர்ந்துசமூக அறிவியல் பாடத்தைஆசிரியர் நடத்துவதை கவனித்து பின்னர் இந்த பாடம் குறித்து மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது மாணவ மாணவிகளிடம்பெற்றோர்கள் சகோதர சகோதரிகள் இரண்டு சக்கர வாகன ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்துஇருசக்கர வாகனத்தை இயக்க எப்படி வற்புறுத்தீர்கள் என்ற கருத்தை கூற செய்தார்  அதன் தொடர்ச்சியாக மாலை  திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கவும் மனுக்கள் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆய்வுகளின் போது  நாகை எஸ்பி ஹர்ஷ்சிங், மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, திருக்குவளை ஊராட்சி மன்ற தலைவர்  பழனியப்பன், சுகாதார பணிகள் துறை துணை இயக்குநர் விஜயகுமார், மாவட்ட  வேளாண்மை இணை இயக்குநர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்,மாவட்ட வருவாய் அலுவலர் பேபி  உள்ளிட்ட அரசு அலுவலர்கள்கலந்து கொண்டனர்

Tags:    

Similar News