நிதி நிறுவனத்திற்கு ரூ. 25000 அபதாரம் - நுகர்வோர் நீதிமன்ற உத்தரவு
கடனை திருப்பி செலுத்தியும் ஆர்.சி புத்தகத்தை வழங்காமல் அலைக்கழித்த தனியார் நிதி நிறுவனத்திற்கு ரூ. 25000 அபதாரம் விதித்து தஞ்சை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற உத்தரவிட்டது.
பாபநாசம் தாலுக்கா ராஜகிரி கிராமத்தில் வசித்து வருவர் சண்முகவேல் இவர் கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆட்டோஸ் மூலம் தனியார் நிதி நிறுவனத்தில் 2019 ஆம் வருடம் முன்பணம் செலுத்தி மாதத் தவணையில் இருசக்கர வாகன கடனாக பெற்றார் அவர் வாங்கிய கடனுக்கு மேற்படி நிறுவனம் கடனில் வழங்கிய வாகனத்தின் ஆர்.சி புத்தகத்தை அடமானமாக வைத்துக்கொண்டு வாகனத்தை நுகர்வோரிடம் கொடுத்தது.
அதற்குண்டான மாதத் தவணையை மனுதாரர் முறையாக செலுத்தி கடன் நிலுவையில்லா சான்று வழங்கிய பிறகும் மனுதாரருக்கு ஆர்சி புத்தகத்தை நிறுவனம் வழங்காததால் மனுதாரர் பாபநாசத்தில் செயல்படும் தஞ்சை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தில் மனு கொடுத்தார் நுகர்வோர் சங்கத்தின் தலைவர் குழந்தை வேலு மனுதாரர் சார்பாக தஞ்சாவூரில் செயல்படும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி மோகன் தாஸ் வானத்தை கடனாக நுகர்வோருக்கு வழங்கி முறையாக கடனை செலுத்தியும் வாகனத்தின் ஆர்சி புக்கை நுகர்வோர்க்கு வழங்காத நிறுவனம் நுகர்வோருக்கு ஏற்படுத்திய சேவை குறைவாகும் எனவே நுகர்வோருக்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்கும் வீண் அலைச்சலும் ஏற்படுத்தியதற்க்காக இழப்பீடாக நுகர்வோருக்கு ரூ. 20000 வழக்கு செலவுக்காக 5000 வாகனத்தின் ஆர்சி புத்தகத்தையும் தீர்ப்பு வழங்கிய ஒரு மாத அவகாசத்திற்குள் நுகர்வோருக்கு வழங்கும்படியும் காலதாமதம் ஏற்படுமாயின் மேற்படி தொகைக்கு 12 சதவீதம் வட்டி சேர்த்து நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது