அரசு நியாயவிலைக் கடையில் தீ விபத்து
உத்தமபாளையம், அரசு நியாயவிலைக் கடையில் தீ விபத்து உண்டானது.
Update: 2024-05-10 14:55 GMT
தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டி மெயின் ரோட்டில் அரசு நியாய விலை கடையில் இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த 2949 சாக்கு பைகள்,896 பிளாஸ்டிக் பைகள் 100 கிலோ சீனி,15 பாமாயில் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருள்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் இதுகுறித்து கடையின் மேலாளர் ராயப்பன் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ராயப்பன் பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்