ஆவின் டீக்கடையில் திடீரென பற்றிய தீ
திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் அருகே செயல்பட்டு வந்த ஆவின் டீக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-04-18 13:51 GMT
திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் அருகே செயல்பட்டு வந்த ஆவின் டீக்கடையில் இன்று காலை திடீரென தீப்பற்றி எறிய ஆரம்பித்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் காயமடைந்த டீ மாஸ்டர் ரகு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.