வானவேடிக்கையின் போது தீ பிடித்து எறிந்த தென்னைமரம்

காரைக்குடியில் வானவேடிக்கையின் போது தென்னைமரம் தீ பிடித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-21 05:08 GMT

தீ விபத்து 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு காரைக்குடியின் பல்வேறு பகுதிகளான ரயில்வே, இலுப்பக்குடி, காளவாபொட்டல், பொன்நகர், மருதுபாண்டி நகர், முத்துராமலிங்க தேவர் நகர், கணேசபுரம், அண்ணா நகர், கழனிவாசல், என நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மதுகுடம், முளைப்பாரி எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தினர். அம்மனுக்கு செலுத்தப்பட்ட முளைப்பாரி மதுகுடம் ஆகிவற்றை பருப்புஊரணியில் கரைத்தனர். அப்போது காரைக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வான வேடிக்கை மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் அருகில் இருந்த தென்னை மரத்தில் வான வெடி பட்டதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யாருக்கும் எந்தவித தீக்காயம் ஏற்படவில்லை .
Tags:    

Similar News