தீ தொண்டு வாரம் !

தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

Update: 2024-04-18 01:35 GMT

தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.


மும்பையில் உள்ள துறைமுகத்தில் கடந்த 1994ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும்போது, கப்பல் வெடித்து 66 தீயணைப்பு வீரர்கள் உள்பட 1,300 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை தீத் தொண்டு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், கல்லூரி, காய்கறி சந்தை, மார்க்கெட் உள்ளிட்ட பொது இடங்களில் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட உதவி அதிகாரி அரி பரந்தாமன் அறிவுறுத்தலின் பேரில் ஊட்டியில் தீயணைப்பு துறை சார்பில் தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பிரசாரம், ஒத்திகை பயிற்சி, துண்டு பிரசுரங்கள் வினியோகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினர் கூறியதாவது:- பணியில் இருந்தபோது உயிர் நீத்த வீரர்களுக்கு கடந்த 14ம் தேதி வீரவணக்கம் மற்றும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அசாதாரணமான சூழ்நிலைகள் ஏற்பட்டால் அந்த இடத்தில் இருந்து நாம் முதலில் எவ்வாறு தப்பிக்க வேண்டும். நம்மை சுற்றி இருப்பவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுவாக சமையல் செய்து முடிந்தவுடன் கியாஸ் அடுப்பின் ரெகுலேட்டரை அணைத்து விட வேண்டும். ஆடைகள் தீப்பிடித்துக் கொண்டால் ஓடாமல் நின்று கீழே படுத்து தரையில் உருள வேண்டும். பள்ளிக்கூடம் செயல்பட்டு கொண்டு இருக்கும்போது நுழைவு வாயில் கதவுகள் மற்றும் அவசர வழிகளை திறந்து வைக்க வேண்டும். மாணவர்களுக்கு தீவிபத்தின் போது வெளியேறுதல் பயிற்சி மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு வகுப்பு மாதம் ஒருமுறை நடத்த வேண்டும். வணிக வளாகங்கள் மற்றும் உயர் மாடி கட்டிடங்களில் தீ பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதை சரி பார்க்க வேண்டும். மின்சார தீ விபத்து ஏற்படாமல் இருக்க தரமான மின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். நான்கு சக்கர வாகனங்களை ஏற்படும் தீ விபத்தை தடுக்க புகை தென்பட்டவுடன் பேட்டரி ஒயர்களை கழற்றிவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். அப்போது அவருடன் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் ஸ்ரீதர், அன்பகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News