வேஸ்டேஜ் ஆயில் சேமிக்கும் குடோனில் தீ விபத்து.

பூந்தமல்லி அருகே வேஸ்டேஜ் ஆயில் சேமிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சில மணிநேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Update: 2024-06-10 02:52 GMT

கொழுந்து விட்டு எரியும் தீ 

சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே கோலப்பஞ்சேரி பகுதியில் வேஸ்டேஜ் ஆயில் சேமிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்து விட்டு எரிவதால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.


Tags:    

Similar News