கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை
கந்தர்வகோட்டை வட்டார அரசு மருத்துவமனைகளில் தீ தடுப்பு ஒத்திகை சனிக்கிழமை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;
Update: 2024-05-26 09:54 GMT
தீதடுப்பு ஒத்திகை
கந்தர்வகோட்டை ஒன்றியம், புதுநகர் ஊராட்சி மற்றும் ஆதனக்கோட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலர் சிவக்குமார் (பொ) மற்றும் அறிவழகன் உள்ளிட்ட வீரர்கள் பேரிடர் மற்றும் தீ விபத்து காலங்களில் உயிர், உடைமைகள் பாதுகாப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தனர். நிகழ்வில், புதுநகர் தலைமை மருத்துவர் மணிமாறன்,ஆதனக்கோட்டை தலைமை மருத்துவர் பொன். சரவணன், சுகாதார ஆய்வாளர் கோ.முத்துக்குமார் மற்றும் செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் வெளி நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.