16 அடி அலகு குத்தி மாரியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் தீமிதி
திருக்கடையூர் ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் 16அடிநீள அலகு குத்தியும் ,அலகு காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
Update: 2024-03-25 04:16 GMT
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் கீழவீதியில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. இன்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஆணை குளத்திலிருந்து கரகம் புறப்பாடு செய்யப்பட்டது. காப்பு கட்டி விரதமிருந்து பக்தர்கள் அலகு காவடி எடுத்தும் 16 அடிநீள அலகை வாயில் குத்தியும், மஞ்சள் உடை உடுத்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஆலயம் வந்தடைந்தனர். ஆலயத்தின் முன்பே அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.