சிவகாசியில் பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு ஆலைகள் கால வரையின்றி வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

Update: 2024-05-24 13:20 GMT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு ஆலைகள் கால வரையின்றி வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி வேலை நிறுத்த போராட்டம் தொடக்கம்.. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி,சாத்தூர்,வெம்பகோட்டை பகுதிகளில் சுமார்1180 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது இந்த பட்டாசு ஆலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் எட்டு லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த நிலையில் தொடர் பட்டாசு விபத்தின் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பாக பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் மீறப்படுவது குறித்து ஆய்வு செய்வதற்காக நான்கு தனி படைகள் அமைக்கப்பட்டு அந்த குழுக்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்க விதமாகவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் ( டாப்மா) சார்பாக இன்று முதல் (24.05.2024) மறு அறிவிப்பு வரும் வரை காலவறையற்ற விடுமுறை அளிப்பதாக அனைத்து சங்க உறுப்பினர்களாலும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு காலவரையின்றி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News