செஞ்சி ரங்கபூபதி நர்சிங் கல்லூரியில் முதலுதவி பயிற்சி
செஞ்சி ரங்கபூபதி நர்சிங் கல்லூரியில் முதலுதவி பயிற்சி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீரங்க பூபதி நர்சிங் கல்லூரி மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை குறித்த செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. இதற்கு கல்லூரி தாளாளர் வக்கீல் ரங்கபூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். முதல்வர் மேனகாகாந்தி வரவேற்றார்.
இதில் கேரளாவை சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியன் எமர்ஜென்சி மெடிக்கல் சயின்ஸ் நிறுவனத்தின் பயிற்சியாளர் கள் ஜென்னி தாமஸ், சிவராமன், அருண் பிரசாந்த், அஸ்வின் பிரான்சிஸ், அதிரா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். அப்போது முதலுதவி திறன் வளர்த்தல் அவசர கால சிகிச்சை குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் கஸ்தூரி, சுகந்தி, மாலதி, ஜெயலட்சுமி, தமித்ரா, பிரபாவதி, கோசலை மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.