மதுரை மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்ட முதல் நூலகம்

மதுரையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு டாக்டர் சாய் லட்சுமி நினைவு நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-03-08 12:41 GMT

நூலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள்

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு டாக்டர் சாய் லட்சுமி நினைவு நூலகம் திறப்பு விழா வட்டார கல்வி அலுவலர் ஜான்சி தலைமையில் நடைபெற்றது.

வட்டார கல்வி அலுவலர் எஸ்தர் இந்திராணி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தென்னவன் வரவேற்றார். நூலகத்தினை வட்டார கல்வி அலுவலர்கள் திறந்து வைத்தனர். புத்தக அலமாரியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு நாகலட்சுமி திறந்து வைத்தார்.

வாசிப்பு மகிழ்ச்சி தரும் என்ற தலைப்பில் நான்காம் வகுப்பு மாணவி ஜெய ஸ்ரீ பேசினார். அரியவை அறிவோம் என்ற புத்தகத்தை ஹாஜிரா பானு திறனாய்வு செய்தார். மேலும் முகமது இத்ரீஸ், ஷர்மிளா பானு, ஹிபா பேகம் ஆகியோர் காட்டுக்குள்ளே மேஜிக், இயக்கம், வட்டமான அப்பளம் ஆகிய நூல்களை புத்தக திறனாய்வு செய்தனர்.

உமையம்மாள், விசித்திர கதை கூறினார். வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர், ஆசிரியைகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் என அனைவரும் புத்தகம் வாசித்தனர். புத்தகத் திறனாய்வு செய்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரியர் பயிற்றுனர் சித்தி ஜுனைதா பானு, ஏகம் பணியாளர்கள் ராஜேஷ், அன்பரசன் மற்றும் நல்லோர் குழுவை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் ரவி,

அறிவழகன், நாகராஜ், அப்துல்லா, சிலம்பம் மாஸ்டர் பாண்டி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆமினா பேகம், சல்மா, முகமதா, சித்ரா, ஷகிலா பானு, நாகூர் அம்மாள், ரெஜினா மற்றும் பெற்றோர்கள், ஊர் பெரியவர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் வசந்தி வாழ்த்துரை வழங்கினார். பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் ஐனூல் ஜாரியா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ராஜவடிவேல், சுகுமாறன், சித்ரா, விஜயலட்சுமி, அனுசியா, அருவகம், தமிழ்ச்செல்வி, அகிலா,

அம்பிகா ஆகியோர் செய்திருந்தனர் விழாவில் பறை இசை, சிலம்பம், வளரி, சுருள் முதலிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.மதுரை மாவட்டத்திலேயே பெற்றோருக்காக மாணவ மாணவிகளுக்காக பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்ட முதல் நூலகம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News