மேட்டூரில் செத்து மிதக்கும் மீன்கள்
சேலம் மாவட்டம் ,மேட்டூர் காவிரி ஆற்றில் இரண்டாவது நாளாக மீன்கள் செத்து கரை ஒதுங்கியது.
மேட்டூர் அணையில் கட்லா ரோகு மிர்கால் கெண்டை கெளுத்தி உட்பட 25 வகையான மீன்கள் உள்ளன. மேட்டூர் மீன்களுக்கு தமிழகம் முழுவது நல்ல கிராக்கி உள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேட்டூர் அணைப்பகுதியில் அணையின் வலதுகரை மற்றும் இடதுகரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் நேற்று மீன்வளத்துறை அதிகாரிகள் நீர் மற்றும் இறந்துபோன மீன்களை பரிசோதனை செய்ததில் ஆக்சிஜன் சீராக இருந்துள்ளது. நீரில் ரசாயண கலப்பு இல்லை என்றும் தெரியவந்துள்ளது. மீன்கள் இறக்கும் நேரத்தில் நீரில் ஆக்சிஜசன் பற்றாக்குறை ஏற்பட்டு பின்னர் சிறிது நேரத்தில் சீராகி இருக்கலாம்.
இது குறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது வெப்பமாறுதல் காரணமாக மீன்கள் இறந்துள்ளன. தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாக தண்ணீர் சூடாக உள்ள இடத்தில் திடீரென மழை பெய்வதால் குளிர்ந்த நீர் கலந்து வெப்ப மாறுதல் ஏற்படுகிறது. இதனை தாங்க முடியாத மீன்கள் இறந்து போகின்றன என தெரிவித்தனர் .