தடைக்காலம் இன்றுடன் நிறைவு கடல் பயணத்துக்கு மீனவர்கள் தயார்!
தடைக்காலம் இன்றுடன் நிறைவு கடல் பயணத்துக்கு மீனவர்கள் தயார்.
Update: 2024-06-14 05:55 GMT
மணமேல்குடி: கடலில் வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்துக்காகவும் ஆண்டுதோரம் ஏப்ரல் 14ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த நாட்களில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அதன்படி நடப்பாண்டு ஏப்ரல் 14ம் தேதி நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. இதன் காரணமாக புதுகை மாவட்டம் கோட்டைப்பட்டி னம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதிகளில் 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக் கப்பட்டன. தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், இன்ஜின் பழுது பார்த்தல், மீன்பிடி வலைகளை சரிசெய்தல் உள் ளிட்ட பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர். தடைக்காலத்தால் மீனவர்கள் மட்டுமின்றி, ஐஸ் கட்டிகள் தயாரிப்போர், கருவாடு உலர்த்துவோர், வியாபாரிகள்,கூலித்தொழிலாளிகள் என்று மீன்பிடி தொழில் சார்ந்தவர்கள் வேலையின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும், மீன்கள் விலை யேற்றத்தால் அசைவ பிரியர்களும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருவதால், கடல்வாழ் உயிரினங்கள் அதிக அளவில் கிடைக்க வேண்டும் என்று வேண்டி, படகுகளுக்கு மாலையிட்டு, பூஜைகள் செய்து கட லுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.