மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் மற்றும் நிவாரண உதவிகள்
கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் நடைபெற்ற நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.;
Update: 2024-02-05 05:31 GMT
கன்னியாகுமரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் அரங்கில் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டு மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), செ.ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.