கொரவப்பட்டியில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
கொரவப்பட்டியில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மே 12ஆம் தேதி மதியம் 3- மணி அளவில், கொரவப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப் அருகே பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது.
இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட குளத்துப்பட்டியை சேர்ந்த சின்னசாமி, கொரவப்பட்டியைச் சேர்ந்த மகாசாமி, நந்தனூரை சேர்ந்த சிவசாமி, கண்ணன், ஏமூரை சேர்ந்த ரவி ஆகிய 5- பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.500-யும் பறிமுதல் செய்தனர். 5- பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்,
பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.