பாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 75அடி கம்பத்தில் கொடி ஏற்றம்

பாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் 75 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம் கொடி ஏற்றப்பட்டது.

Update: 2024-01-26 14:18 GMT

தேசிய கொடி ஏற்றம்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா பாவூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் 75 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் 12 அடி நீளமுள்ள தேசியக் கொடியை ஏற்றி குடியரசு தின விழாவை கொண்டாடினர்.

நாட்டின் 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு பாவூர் ஊராட்சி மன்ற தலைவர் அனிதா பிரபு, அவரது சொந்த நிதியில் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் ரூ. 2லட்சம் மதிப்பில் 75அடி உயரத்தில் பிரம்மாண்டமான நிரந்தர கொடிக்கம்பம் நிறுவப்பட்டு 

இன்று பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஊராட்சி மன்ற அனிதாபிரபு 12 அடி நீளமுடைய மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மாணவர்கள் மற்றும் கிராம பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கினர். மேலும் விழாவில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

Tags:    

Similar News