மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி

நாகை மாவட்டம் திருமருகல் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-06-16 14:21 GMT

நாகை மாவட்டம் திருமருகல் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.


நாகை மாவட்டம் திருமருகல் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அண்ணாமண்டபம் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்பாபு தலைமை தாங்கினார்.மாவட்ட குழு உறுப்பினர் லெனின் முன்னிலை வகித்தார்.இதில் மாநில உறுப்பினர் நாகை மாலி எம்.எல்.ஏ கலந்துகொண்டு கட்சியின் கொடி ஏற்றி வைத்தார்.

இதில் அண்ணா மண்டபம் பகுதியில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 5 குடும்பத்தினர் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.புதிதாக கட்சி இணைந்தவர்களுக்கு நாகை மாலி எம்.எல்.ஏ சால்வை அணிவித்து கட்சியில் இணைத்துக் கொண்டார்.இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாரதி,பாலு,தமிழரசன்,காரல் மார்க்ஸ்,பால்பக்கிரிசாமி,பொன்மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கிளை செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News