ஸ்ரீ வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலில் கொடிக்கம்பம் நடுதல் நிகழ்ச்சி !

ஸ்ரீ வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழாவில் முன்னிட்டு கொடிக்கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-04-17 07:09 GMT

கொடிக்கம்பம் நடுதல் நிகழ்ச்சி

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழாவில் முன்னிட்டு கொடிக்கம்பம் நடுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கௌமாரியம்மன் வழிபட்டு சென்றனர்.

  தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் நிகழ்ச்சி நடைபெற்று வருவது வழக்கம் இந்நிலையில் இந்தாண்டுக்கான 8 நாட்கள் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று கொடி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

 முன்னதாக கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயிலில் அருகே செல்லும் முல்லைப் பெரியாற்றில் இருந்து முக்கோண வடிவிலான அத்திமர கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மேல தாளங்கள் முழங்க அத்திமர கொடிக்கம்பத்தை ஊர்வலமாக சுமந்து வந்து கௌமாரியம்மன் திருக்கோவிலை அடைந்தனர்.

 அங்கு கோவில் வளாகத்தில் கௌமாரியம்மன் எதிரே கொடிக்கம்பத்தை நடுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து கொடிக்கம்பத்திற்கு வண்ணமலர் மாலைகளால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கொடி கம்பம் நடுதல் நிகழ்ச்சியை கண்டு கௌமாரியம்மன் தரிசித்துச் சென்றனர்.

Tags:    

Similar News