ராமநாதபுரம் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் அதிக அளவில் உள்ள பிளமிங்கோ பறவைகள்
ராமநாதபுரம் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு பிளமிங்கோ பறவை வருகை தற்போது துவங்கியுள்ளது. இதனால் கோதண்ட ராமர் கோவில் அருகாமையில் ஏராளமான வெளிநாட்டு பிளமிங்கோ பறவைகள் வலசைக்காக வந்துள்ளன.
Update: 2024-02-26 11:36 GMT
ராமநாதபுரம் அமெரிக்கா ஐரோப்பா ரஷ்யா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதிக்கு பிளமிங்கோ என்று என்று அழைக்கப்படும் வெளிநாட்டு பறவைகள் சீசனுக்கு வருவது வழக்கம் இந்த ஆண்டு பருவமழை கடந்த நவம்பர் முதல் வாரம் துவங்கி டிசம்பர் இறுதி வரை இராமேஸ்வரம் தனுஷ்கோடி தங்கச்சிமடம் பாம்பன் போன்ற கடலோர பகுதிகளில் பரவலாக பெய்ததால் குளங்களும் நீர் ஓடைகளும் தண்ணீர் நிரம்பியுள்ளன இந்நிலையில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடற்பகுதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரம் மைல்கள் பறந்து பிளமிங்கோ பறவைகள் தற்போது வரத் துவங்கியுள்ளன இந்நிலையில் ராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் பகுதியில் ஏராளமான பிளமிங்கோ பறவைகள் வலசைக்காக வந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் சமூக வலைதளத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி காலை 11 மணியளவில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வகை பிளமிங்கோ பறவைகளை ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்த மகிழ்ந்து செல்கின்றன