செந்திக் குமார நாடார் கல்லூரி சார்ப்பில் வெள்ளை நிவாரண உதவி

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி மாணவர் நலன் சேவைப் பிரிவு, நாட்டுத்தொண்டுத் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினர்.

Update: 2024-01-08 05:54 GMT
செந்திக் குமார நாடார் கல்லூரி சார்பாக வெள்ளை நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது

விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரி மாணவர் நலன் சேவைப் பிரிவு, நாட்டுத்தொண்டுத் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை இணைந்து தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கல்லூரிச் செயலாளர் எம். டி. சர்ப்பராஜன் அவர்கள் வாழ்த்தி, வழியனுப்பினார்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள அதிசயபுரம் என்ற கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கல்லூரி முதல்வர் முனைவர் அ.சாரதி வழங்கினார். சுமார் 140 குடும்பங்கள் வசிக்கும் 500 மக்களுக்கு பயன்படும் வகையில் ரூ ஒரு லட்சம் மதிப்புள்ள அத்தியாவாசிய நிவாரணப் பொருட்களானப் போர்வை, அரிசி பிரட் நாப்கின், சில்வர் சாமான்கள், சோப், பிரஷ், பிளாஸ்டிக் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் 100, மாணவ / மாணவியர்களுக்கு நோட்டுகள், எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர் சேவைப் பிரிவு டீன் முனைவர் என். நிர்மல் குமார், கூடுதல் டீன் முனைவர் ஜெ. பாண்டியராஜன் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் ஏ.சக்திவேல், இணை தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் முனைவர் எம்.மனோகரன்,நா. அழகு மணிக் குமரன், முதுநிலை வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் முனைவர் எம்.பாலாஜி,வணிகவியல் துறைத் தலைவர் (சுயநிதி)முனைவர் செ செல்வநாதன்,நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி செ.வே. செல்வம், தமிழ்த்துறைப் பேராசிரியர் (சுயநிதி) சோ.ஹரி பாண்டியராஜன்முதுநிலை வணிக நிர்வாகவியல் துறைப் பேராசிரியர் பால் ஜோஸ்வா மோசஸ், தேசிய மாணவர் படைத்த மற்றும் நாட்டு நலப் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

Tags:    

Similar News