அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 6500 கன அடி உபநீர் வெளியேறுவதால், அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2024-01-09 10:15 GMT

 உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 6500 கன அடி உபநீர் வெளியேறுவதால், அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

உடுமலை அருகே உள்ள நிரம்பிய நிலையிலுள்ளஅமராவதி அனையிலுருந்து விநாடிக்கு 6500 கன அடி நீர் உபரி நீராக திறப்பு. நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் திருப்பூர் கரூர் மாவட்ட அமராவதி ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மழைகளில் பெய்துவரும் தொடர்மழையால் அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து 700கன அடியிலிருந்து 3000கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையின் நீர்மட்டம் 10 நாட்களாக 89.30 அடியிலிருந்த நிலையில் தற்போது முழு கொள்ளளவான 90 அடியை  தொட்டது. இந் நிலையில்  அணையின் பாதுகாப்பு கருதி   ஆற்று மதகுகளில் இருந்து 6500கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறதுமேலும் மழை அதிகரித்தால் நீர்வரத்து அதிகரிக்கும் அப்போது உபரிநீர் வெளியேற்றமும் அதிகரிக்கும் என பொதுப்பணித்துறையினர் தெரிவிக்கின்றனர். எனவே திருப்பூர் கருர் மாவட்டங்களை சார்ந்த அமராவதி கரையோர கிராம மக்கள் ஆற்றுபகுதிக்கு செல்வதை தவிர்க்கும்படி எச்சரிக்கை விடபட்டுள்ளது.

Tags:    

Similar News