திருப்பூரில் வரத்து அதிகமானதால் பூக்கள் விலை சரிவு

திருப்பூரில் வரத்து அதிகமானதால் பூக்களின் விலை சரிந்து காணப்பட்டது.

Update: 2024-06-12 10:34 GMT

விலை சரிவு 

திருப்பூர் மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து அதிகமாக காணப்பட்டதால் பூக்கள் விலை குறைந்து காணப்பட்டது. இந்த பூ மார்க்கெட்டிற்கு திண்டுக்கல், சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மல்லிகை, அரளி பூக்கள் விற்பனைக்கு பூக்கள் கொண்டுவரப்படுகிறது.

மேலும் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியிலிருந்தும் விற்பனைக்காக பூக்கள் கொண்டு வரப்படுகிறது.கடந்த சில நாட்களாக வெயில் மற்றும் மழை என வந்ததால் பூக்களின் விளைச்சல் குறைந்தது. இதனால் வரத்து குறைந்து பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

தற்போது முகூர்த்தம் அதிகம் உள்ளதால் விற்பனை அதிகமாக காணப்படும் என திருப்பூர் பெருமாள் கோவில் அருகே உள்ள மார்க்கெட்டில் வியாபாரிகள் அதிக இறக்குமதி செய்தனர். மார்க்கெட்டில் நேற்று விற்பனை இல்லாததாலும், விலை குறைந்து காணப்பட்டதாலும் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். மார்க்கெட்டில் விற்பனையான பூக்களின் விலை விபரம் மல்லிகை ரூ. 800,முல்லை ரூ. 300,அரளி ரூ. 50,சம்பங்கி ரூ. 60,கோழிக்கொண்டை ரூ. 140,செவ்வந்தி ரூ. 320,பன்னீர் ரோஸ் ரூ. 120,மற்றும் பட்டன் ரோஸ் ரூ. 120 ஆகிய விலைகளில் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்...

Tags:    

Similar News