சிவராத்திரியை தினத்தை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு

இன்று சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தர்மபுரி பேருந்து நிலையம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

Update: 2024-03-08 07:59 GMT

பூக்கள் விலை உயர்வு 

தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் நல்லம்பள்ளி அதியமான்கோட்டை,நார்த்தம்பட்டி, ஏலகிரி, சோலை கொட்டாய்,காரிமங்கலம், மாட்லாம்பட்டி,பெரியாம்பட்டி,பழைய தர்மபுரி, வெண்ணாம்பட்டி. தடங்கம்,குள்ளனூர், கடகத் தூர், குண்டல்பட்டி, செட்டி கரை,மேல் ராஜா தோப்பு, முக்கல்நாயக்கன்பட்டி, போன்ற பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்த பூக்களை தர்மபுரி நகர பேருந்து நிலைய பூ மார்க்கெட்டிற்கு  விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இன்று சிவராத்திரி தின விழாவை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இன்று குண்டுமல்லி ஒரு கிலோ 900 ரூபாய், சன்ன மல்லி ஒரு கிலோ 800 ரூபாய், கனகா மரம் 600 ரூபாய்,காக்க நாம் பூ 450 ரோஸ் ஒரு கட்டு 200 ரூபாய், ஜாதிமல்லி 370 ரூபாய் , பன்னீர் ரோஸ் 250 ரூபாய் , அரளி ஒரு கிலோ 150 ரூபாய், கோலி கொண்டாய் 200 ரூபாய், சம்பங்கி 180 ரூபாய்,செண்டுமல்லி 70 ரூபாய்க்கும், சாமந்தி 200 ரூபாய்க்கும், பூக்கள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News