திருப்பூரில் டிரோன்கள் பறக்க தடை

அவிநாசி பழங்கரை அருகில் முதலமைச்சர் ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதையொட்டி மாவட்டம் முழுவதும் டிரோன்கள் பறக்க தடை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-13 06:45 GMT

ட்ரோன் பறக்க தடை

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே வேலூர் கிராமத்தில் நாளைய தினம் திருப்பூர் மற்றும் நீலகிரி தொகுதி  வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ள பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி நாளைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் ட்ரோன் கேமரா பறக்க தடை விதித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News