ராசிபுரம் அருகே 29 கிலோ தங்க நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்
ராசிபுரம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் எடுத்துச் செல்லப்பட்ட 6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்க நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மல்லூர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அகமது தலைமையிலான அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள தங்க நகை கடைகளுக்கு தனியார் கொரியர் சர்வீஸ் மூலம் நகைகளை கொண்டு சென்றுள்ளனர்.
அதிகாரிகள் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது உரிய ஆவணங்கள் இன்றி 6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கம் ஒப்படைத்தார்.
பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கம் கேட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் திண்டுக்கல் மதுரை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நகைக்கடைகளுக்கு 39 பெட்டிகளில் தங்க நகைகளை ஏற்றிக்கொண்டு செல்வதாகவும்,பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உரிய ஆவணங்கள் இல்லாததால் 29 கிலோ தங்க நகைகள் ராசிபுரம் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தார்.