பாஜக வேட்பாளர் வாகனத்தை சோதனை செய்த பறக்கும் படையினர்
பா.ஜ.க., வேட்பாளர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-12 13:45 GMT
பாஜக வேட்பாளர் வாகனத்தை சோதனை செய்த பறக்கும் படையினர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் இன்று தேர்தல் பரப்புரை செய்து வாக்கு சேகரிக்க பா.ஜ.க., வேட்பாளர் எல்.முருகன் ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடி சென்றுள்ளார். அப்போது மசினகுடி, சீகூர் பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அவ்வழியாக பயணித்த நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் பா.ஜ.க., வேட்பாளர் எல். முருகனின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். எல்.முருகனின் வாகனம் மற்றும் அவருடன் பயணித்த அனைத்து வாகனங்களையும் முழு பரிசோதனை மேற்க் கொண்ட பின்னரே வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.