பறக்கும் படையினர் சோதனை -3.25 லட்சம் ரொக்கம் பறிமுதல்!
பறக்கும் படையினர் சோதனை -3.25 லட்சம் ரொக்கம் பறிமுதல்!;
Update: 2024-03-31 05:34 GMT
பறிமுதல்
திருமயம்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு திருமயம் அருகே காட்டுபாவா பள்ளிவாசல் பகு தியில் தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனில் மீன் வியாபாரி மாதேஸ்வரன்(65) ரூ. ஒரு லட்சத்து 45 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், ஈரோட்டில் இருந்து குளத்து மீன் வாங்கி திருப்பத்துார் வரை மொத்தமாக விற்று வருவதாகவும், வாரம் ஒருமுறை பணத்தை வசூலித்து வருவதாகவும் தெரிவித்தார். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். இதேபோல் காரைக்குடி சாலையில் காரில் வந்த மகமாயிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் இருந்து ரூ.51 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அறந்தாங்கி அருகே இடையார் கிராமத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 726ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து ஆர்டிஓ சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.