சேலம் நெத்திமேட்டில் பறக்கும் படையினர் வாகன சோதனை !

சேலம் நெத்திமேட்டில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 5½ கிலோ வெள்ளிக்கட்டிகள் சிக்கியது.

Update: 2024-03-30 06:28 GMT

வாகன சோதனை


சேலம் நெத்திமேட்டில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 5½ கிலோ வெள்ளிக்கட்டிகள் சிக்கியது. சேலம் தெற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட நெத்திமேடு பகுதியில் கூட்டுறவுத்துறை கூடுதல் சார்பதிவாளர் வீரமணி தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த கூரியர் நிறுவன வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். வேனில் இருந்த அட்டை பெட்டியில் 5½ கிலோ வெள்ளி கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வேனை ஓட்டி வந்த டிரைவர் மோகன்குமாரிடம் விசாரணை நடத்தினர். அதில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள கூரியர் நிறுவனத்திற்கு வெள்ளி கட்டிகள் பார்சலில் வந்தது என்றும், அதனை செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு வெள்ளிப்பொருட்கள் விற்பனை கடையில் வழங்குவதற்காக கொண்டு செல்வதாக தெரிவித்தார். எனினும் அதற்கான ஆவணம் இல்லை என்று கூறி பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கட்டிகளை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக்கட்டிகளின் மதிப்பு ரூ.4 லட்சத்து 69 ஆயிரம் ஆகும்.
Tags:    

Similar News