விழுப்புரம் அருகே ரூபாய் 3,98,900 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல்
விழுப்புரம் அருகே உரிய ஆவணம் என்று பேருந்தில் எடுத்துச் சென்ற ரூ.3,98,900 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-03-30 06:02 GMT
பணம் பறிமுதல்
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி, திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் கண்டாச்சிபுரம் அருகே உள்ள அடுக்கம் கிராமத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நந்தகோபால கிருஷ்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் திருவண்ணாமலை விழுப்புரம் சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் பகுதிகளில் கிளைகள் வைத்து குளிர்பானம் மார்க்கெட்டிங் செய்து வரும் தனியார் நிறுவனத்தின் ஊழியரான பிரகாஷ் என்பவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 3,98,900 ரூபாய் பணத்துடன் ஆவணங்கள் இன்றி தமது அலுவலகமான விழுப்புரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அவரை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணம் இன்றி பணம் எடுத்துச் சென்றதாக கூறி பணத்தை பறிமுதல் செய்து திருக்கோவிலூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்