வாகன தணிக்கையில் ரூ. 61, 900 பறிமுதல்
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையின்போது 61, 900 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
Update: 2024-04-01 14:26 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி நடுவலூர் கிராமத்தில் இன்று மதியம் பறக்கும் படை அலுவலர் கூட்டுறவு சார் பதிவாளர் மாரியம்மாள் தலைமையிலான குழு வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது எவ்வித ஆவணங்கள் இன்றி ரூபாய் 61900/-ஆத்தூர் அருகே வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் எடுத்து வந்த தொகையை பறிமுதல் செய்தனர். மேற்படித்தொகை கெங்கவல்லி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.