நாட்டுப்புற கலைஞர்கள் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

புதுக்கோட்டையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

Update: 2024-04-09 04:42 GMT

விழிப்புணர்வு 

புதுக்கோட்டை: மக்களவைத் தேர்தலில் 100 சதவிகிதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில், நாட்டுப்புறக் கலைஞர்களின் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஐ.சா. மெர்சி ரம்யா இந்தக்கலைப் பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேருந்துகளில் ஏறி, வாக்காளர்கள் அவசியம் வாக்களிக்க வேண்டும் என்ற துண்டுப் பிரசுரங்களையும் ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் வருவாய்க் கோட்டாட்சியர் பா, ஐஸ்வர்யா, புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சி.ந. சியாமளா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
Tags:    

Similar News