நாகையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடைகளில் சோதனை

நாகையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடைகளில் சோதனை செய்து ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை உள்ளிட்ட ரூ 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-27 09:32 GMT

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்

நாகப்பட்டினம் அருகில் பாப்பாகோவிலில் உள்ள ஒரு கடையில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் அவர்கள் உத்தரவின்படி, இன்று ( 25.05.24 ) நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் எம்.ஆண்டனிபிரபு மற்றும் நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த கடையில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப் உள்ளிடவை கண்டறியப்பட்டது. மேலும் வந்த ரகசிய தகவலையடுத்து அந்தனப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிலோ ஹான்ஸ், 5 கிலோ கூல்லிப் மற்றும் சில புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

பின்னர் அந்த புகையிலை பொருட்களில் இரண்டு உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. உணவு மாதிரிகளின் முடிவுகள் வந்தவுடன் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் அளவில் இருக்கும். தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள்,

விற்பனை குறித்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையரகத்திற்கு 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்க வேண்டுகிறோம். புகார்தாரர்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.

Tags:    

Similar News