விவசாயிகளுக்கு பாத பூஜை!
புதுக்கோட்டையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் விவசாயிகளுக்கு பாத பூஜை செய்யப்பட்டன.
இளையோர் மேம்பாட்டு மையம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் விவசாயிகளுக்கு பாத பூஜை செய்து விவசாயிகளை மகிழ்வித்தனர்.
புதுக்கோட்டை அருகே பாலன் நகர் பகுதியில் இளையோர் மேம்பாட்டு மையம் இளைஞர் அணி நற்பணி மன்றம் கடந்த 30 வருடங்களாக போகி பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் திருநாளன்று பல்வேறு நிகழ்வுகளை அதாவது சமத்துவ பொங்கல் வைப்பது கபாடி, உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது வழக்கம் ஆனால் இந்த வருடம் உலகிற்கு உணவு தரும் விவசாயிகளை அழைத்து அவர்களை மகிழ்விக்கும் வகையில் பாத பூஜை செய்து வணங்கி மகிழ்ந்தனர்.
விவசாயிகளின் பாதங்களில் தண்ணீர் மற்றும் பால் ஊற்றி கழுவி அதன் பின்பு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து மாலை அணிவித்து விவசாயிகளின் அடையாளமான பச்சை துண்டை தலையில் சுற்றி வைத்து தீபாரதனை காண்பித்து வேஷ்டி அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தனர் 30 வருடங்களாக இந்த பொங்கல் பண்டிகையின் போது மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பொதுமக்களையும் அழைத்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் செய்து வருகின்றனர் இதுபோல் இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இளைஞர் நற்பணி மன்ற சார்பில் தொடர்ந்து விழாக்கள் நடத்தி வருவதால் மூன்று முறை மத்திய அரசால் சிறந்த இளைஞர் நற்பணி மன்றம் விருது பெற்று உள்ளனர் இந்த நிகழ்வினை இளைஞரணி நற்பணி மன்ற நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது