நெல்லையப்பர் கோவிலை கண்டு ரசித்த அயலக தமிழர்கள்
வேர்களைத் தேடி திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் வந்துள்ள புலம்பெயர் தமிழர்கள் நெல்லையப்பர் கோவிலின் சிற்பங்கங்களை கண்டு வியந்து ரசித்தனர்.
Update: 2024-01-05 08:55 GMT
வேர்களைத் தேடி திட்டத்தின் முதல் பயணம் கடந்த டிச. 27 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் இருந்து தொடங்கியது. இதில், ஆஸ்திரேலியா, கனடா, பீஜி, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 57 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் சென்னையில் இருந்து மகாபலிபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரிஆகிய இடங்களுக்கு சென்றுவிட்டு திருநெல்வேலிக்கு நேற்று வந்தனர்.பின்னர், நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயிலில் உள்ள சிற்பங்கள், இசைத்தூண்கள், சிலைகள், ஆயிரங்கால் மண்டபம் ஆகியவற்றை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். தாமிரசபை மரச்சிற்பங்களின் நுட்பமான வடிவமைப்பையும் கண்டுவியந்தனர்.