சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக்கு நவராத்திரி தினங்களின் போது செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.

Update: 2023-10-23 01:01 GMT

தடுத்து நிறுத்தப்பட்ட பக்தர்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில். இத்திருக்கோவிலுக்கு மாதம்தோறும் அம்மாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் அனுமதிக்கப்பட்டு வந்தனர். குறிப்பாக நவராத்திரி தினங்களில் சதுரகிரி மலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி உற்சவம் ஏலூர் சாலிய சமூகம் சார்பில் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த வருடத்திற்கான உற்சவம் கடந்த 15 ஆம் தேதி ஆரம்பித்த நிலையில் ஏழுர் சாலியர் சமுதாயத்தின் சார்பில் 10 நாட்களும் நவராத்திரியை முன்னிட்டு மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கோரப்பட்டு இருந்தது. ஆனால் வனத்துறை நிர்வாகம் சார்பில் நவராத்திரி கடைசி மூன்று தினங்களான 22, 23, 24, ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் பக்தர்கள் மலையேர அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.இந்த அனுமதிக்கப்பட்ட நாட்களில் மலையில் தங்க அனுமதி கோரி வனத்துறையிடம் ஏழுர் சாலியர் சமுதாயத்தின் சார்பில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு வனத்துறை அனுமதி மறுத்த நிலையில் ஏழூர் சாலியர் சமூகத்தின் சார்பில் தலைவர் சடையாண்டி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்ற விசாரனையில் நிலுவையில் உள்ளது. இதனால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மூன்று நாட்களை மாவட்ட வனத்துறை நிர்வாகம் ரத்து செய்து தற்போது உத்தரவு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்திருந்த அனுமதிக்கப்பட்ட நாளான நேற்று சதுரகிரி வந்த பக்தர்கள் வத்திராயிருப்பு, மாவூத்து விலக்கு ஆகிய பகுதிகளில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் சதுரகிரி அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி நிலுவையில் உள்ள நிலையில் தற்போது வனத்துறை நிர்வாகம் திடீரென இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதால் செய்வதறியாமல் பக்தர்கள் திகைத்து வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக 300 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக்கு நவராத்திரி தினங்களின் போது செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில். இத்திருக்கோவிலுக்கு மாதம்தோறும் அம்மாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் அனுமதிக்கப்பட்டு வந்தனர். குறிப்பாக நவராத்திரி தினங்களில் சதுரகிரி மலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி உற்சவம் ஏலூர் சாலிய சமூகம் சார்பில் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த வருடத்திற்கான உற்சவம் கடந்த 15 ஆம் தேதி ஆரம்பித்த நிலையில் ஏழுர் சாலியர் சமுதாயத்தின் சார்பில் 10 நாட்களும் நவராத்திரியை முன்னிட்டு மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கோரப்பட்டு இருந்தது. ஆனால் வனத்துறை நிர்வாகம் சார்பில் நவராத்திரி கடைசி மூன்று தினங்களான 22, 23, 24, ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் பக்தர்கள் மலையேர அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.இந்த அனுமதிக்கப்பட்ட நாட்களில் மலையில் தங்க அனுமதி கோரி வனத்துறையிடம் ஏழுர் சாலியர் சமுதாயத்தின் சார்பில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு வனத்துறை அனுமதி மறுத்த நிலையில் ஏழூர் சாலியர் சமூகத்தின் சார்பில் தலைவர் சடையாண்டி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்ற விசாரனையில் நிலுவையில் உள்ளது. இதனால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மூன்று நாட்களை மாவட்ட வனத்துறை நிர்வாகம் ரத்து செய்து தற்போது உத்தரவு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்திருந்த அனுமதிக்கப்பட்ட நாளான நேற்று சதுரகிரி வந்த பக்தர்கள் வத்திராயிருப்பு, மாவூத்து விலக்கு ஆகிய பகுதிகளில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் சதுரகிரி அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி நிலுவையில் உள்ள நிலையில் தற்போது வனத்துறை நிர்வாகம் திடீரென இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதால் செய்வதறியாமல் பக்தர்கள் திகைத்து வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக 300 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News