காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராடும் வனத்துறை

முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதியான சோலூர் பள்ளதாக்கில் 10 ஏக்கருக்கும் மேல் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் அரிய வகை மரங்கள் எரிந்து நாசமானது.

Update: 2024-04-25 15:41 GMT

தீ விபத்து

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 65 சதவீதம் வனப்பகுதியைக் கொண்டுள்ளது. அரிய வகை உயிரினங்கள், மரங்கள், மூலிகை தாவரங்கள் உட்பட பல்வேறு வகையான பறவைகள், வனவிலங்குகளுக்கு இந்த வனம் வாழ்விடமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக நீலகிரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதிகள் முழுவதும் வறட்சி ஏற்பட்டு மரங்கள் செடி கொடிகள் என அனைத்தும் காய்ந்து கருகின.

இந்நிலையில் முதுமலை வெளி மண்டல பகுதிக்குட்பட்ட கல்லட்டி, சோலூர் பள்ளத்தாக்கில் திடீர் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 10 ஏக்கர் வனப்பகுதி முற்றிலும் எரிந்து நாசமாகியது. அப்பகுதிக்கு வனத்துறையினர் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அறிய வகை பறவைகள் மற்றும் உயிரினங்கள் தீயில் கருகி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள் எரிந்து சாம்பலாகி வருகிறது. தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்துள்ள வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்த தீவிரமாக போராடி வருகின்றனர்.

Tags:    

Similar News