வனச்சரக வனத்துறையினர் எச்சரிக்கை
திண்டுக்கல் வனப்பகுதியில் அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.;
Update: 2024-05-09 13:22 GMT
வனத்துறை எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச்சரக எல்லை பகுதிக்குள் செல்லும் ஒட்டன்சத்திரம் - பாச்சலுார் ரோடு 30 கிலோ மீட்டர் துாரம் உள்ளது. ரோட்டில் உள்ள தடுப்புச் சுவர்கள் மீது அமர்ந்து சில நபர்கள் புகைபிடித்தல், மது அருந்துகின்றனர். கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் தீ ஏற்படவும், மது அருந்திவிட்டு போடப்படும் பாட்டில்களால் வன உயிரினங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனச்சரகம் எச்சரித்துள்ளது. மீறுவோர் மீது 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ. 1 லட்சம் அபராதம் என இரண்டும் சேர்ந்து விதிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்