தலமலை வனப்பகுதியில் காட்டுத்தீ 2வது நாளாக இன்றும் தொடருது

தலமலை வனப்பகுதியில் பற்றிய காட்டுத்தீ 2வது நாளாக எரிந்து வருகிறது.

Update: 2024-04-20 06:43 GMT

தலமலை வனப்பகுதியில் பற்றிய காட்டுத்தீ 2வது நாளாக எரிந்து வருகிறது.

தலமலை வனப்பகுதியில் பற்றிய காட்டுத்தீ 2- வது நாளாக பற்றி எரிந்து வருகிறது தலமலை வனச்சரகத்திற்குட்பட்ட திம்பம் மலைபாதை வனப்பகுதியில். பற்றிய 2 வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ தீயை அனணக்க வனத்துறையின் போராடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தி புலிகள் காப்பகம் 1,455 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான வனப்பகுதியை உள்ளடக்கியது. சத்தி புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கோடை வெயில் காரணமாக வனப்பகுதியில் தற்போது வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகின்றன.

இந்நிலையில் தலமலை வனச்சரகத்துக்கு உள்பட்ட திம்பம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று இலை, தழைகளை கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2 வது நாளாக கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ விபத்தில் வனப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருந்த மரங்கள், செடிகள் எரிந்து சாம்பல் ஆனது.

Tags:    

Similar News