மிஷனரி வனப் பகுதியில் காட்டுத்தீ

மிஷனரி ஹில் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு துறையினர் கட்டுப்படுத்தினர்.

Update: 2024-04-05 12:05 GMT

பற்றி எரியும் காட்டுத் தீ 

நீலகிரியில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலால் வனப்பகுதிகள் உட்பட, வனப். பகுதியையொட்டி உள்ள நகர்ப் புறங்களும் வரண்டு காணப்படுகின்றன.

அவ்வப்போது ஏற்படும் தீ விபத்துக்கள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இந்நிலையில் இன்று ஊட்டி மிஷினரி ஹில் பகுதியில் தனியார் நிலத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென வேகமாக பரவியதால் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளுக்கும், வனப் பகுதிக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த நீலகிரி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் ஹரி ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர்,

சம்பவ இடத்திற்கு விரைந்து உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் தீ விபத்தால் யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனாலும் கடும் புகை மூட்டம் நிலவியதால் குடியிருப்புவாசிகள் அவதி அடைந்தனர்.

Tags:    

Similar News