வனத் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம்,ஆலவயல் வனப்பகுதியில் வனத்தீ தடுப்பு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

Update: 2024-03-09 05:26 GMT
வனத்தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயலில் வனத்துறை சார்பில் வனத்தீ தடுப்பு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வனத்துறை மற்றும் ஸ்டெப் பவுண்டேசன் இணைந்து நடத்திய முகாமுக்கு வனச்சரக அலுவலர் ராமநாதன் தலைமை வகித்தார். ஸ்டெப் அறக்கட்டளை இயக்குநர் பசுமை பாரதி முன்னிலை வகித்தார்.

முகாமில் கலை 4 நிகழ்ச்சிகள் மூலம் வனப் பாதுகாப்பு முறைகள், வனத்தீ ஏற்படுவதற்கான காரணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. முகாமில் வனவர்கள் ஜெயக்குமார், பல்லவி, வனக்காப்பாளர்கள் கனகவள்ளி, குணசேகரன் மற்றும் ஊர்ப் பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News